வீடு / சமையல் குறிப்பு / வத்தக்குழம்பு

Photo of Vattha kuzhambu by Adhi Venkat at BetterButter
575
3
0.0(0)
0

வத்தக்குழம்பு

Dec-21-2017
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வத்தக்குழம்பு செய்முறை பற்றி

வற்றக்குழம்பு என்று சொல்லப்படுகிற வத்தக்குழம்பு பாரம்பரிய சமையலில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையானப் பொருட்கள்:-
  2. புளி – எலுமிச்சையளவு
  3. சாம்பார்ப் பொடி – 2 தேக்கரண்டி
  4. மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
  5. உப்பு – தேவையான அளவு
  6. தாளிக்க:-
  7. நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
  8. கடுகு – ¼ தேக்கரண்டி
  9. கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்ட
  11. பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை – சிறிதளவு
  13. சுண்டக்காய் வற்றல் (அ) மணத்தக்காளி வற்றல் – 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
  2. வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்த பின்னர் வற்றலையும் சேர்க்கவும்.
  3. வறுபட்டதும் புளிக்கரைசலை விட்டு உப்பு, சாம்பார்ப் பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. பச்சை வாசனை போனதும் வேண்டுமென்றால் சின்ன துண்டு வெல்லம் சேர்க்கலாம். குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வந்து விடும். இப்போது இறக்கி விடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்