வீடு / சமையல் குறிப்பு / க்ரில்டு சிக்கன் மன்சூரியன்

Photo of Grilled Chicken Manchurian by Hameed Nooh at BetterButter
378
4
0.0(0)
0

க்ரில்டு சிக்கன் மன்சூரியன்

Dec-21-2017
Hameed Nooh
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

க்ரில்டு சிக்கன் மன்சூரியன் செய்முறை பற்றி

எப்பொழுதுமே ஒரே முறையில் டீப் ப்ரை செய்த சிக்கனுக்கு பதிலாக சிறிய மாற்றமாக முயற்சி செய்தது இந்த மன்சூரியன். கார சாரமான இந்த க்ரேவி சப்பாத்தி ரொட்டிக்கு நல்ல சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறியை பிரட்டி வைக்க :
  2. கோழிக்கறி - 1/2 கிலோ
  3. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  5. மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
  6. தந்தாரி மசாலா - 2 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  9. தயிர் - 1/2 கப்
  10. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கேற்ப
  12. மஞ்சூரியன் செய்ய :
  13. வெங்காயம் - 2
  14. நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்
  15. நறுக்கிய இஞ்சி -1/2 தேக்கரண்டி
  16. நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
  17. பச்சை மிளகாய் - 1
  18. சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
  19. தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
  20. சில்லி சாஸ் - 1/2 தேக்கரண்டி
  21. வினிகர் - 2 தேக்கரண்டி
  22. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  23. சோள மாவு - 2 தேக்கரண்டி
  24. வெங்காயத்தாள் - 2
  25. உப்பு - சுவைக்கேற்ப
  26. எண்ணெய் - தாளிக்க

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி பிரட்டி வைக்க கூறப்பட்ட அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  2. பின்பு அதனை இருபுறமும் வேகுமாறு தனலில் க்ரில் செய்து முழுமையாக ஆற விடவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதங்கியதும் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு சாஸ்கள் வினிகர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் கிரில் செய்த சிக்கனை போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்.
  5. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  6. நறுக்கிய வெங்காய தாள் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்