வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கைமா கறி

Photo of Mutton Keema Curry by Hameed Nooh at BetterButter
751
4
0.0(0)
0

மட்டன் கைமா கறி

Dec-21-2017
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கைமா கறி செய்முறை பற்றி

கடலைப்பருப்பு சேர்த்த இந்த கறி சாதத்தோடு ரசம் ஊற்றி சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்துக்கறி (மட்டன் - 1/4 கிலோ
  2. கடலைப்பருப்பு - 100 கிராம்
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 1
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  6. பட்டை - சிறிய துண்டு
  7. கிராம்பு - 1
  8. ஏலக்காய் - 1
  9. கறிவேப்பிலை - 6 இலைகள்
  10. தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  13. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  14. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
  15. தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  16. நெய் - 1 மேசைக்கரண்டி
  17. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கறியை சுத்தப்படுத்தி அதில் பாதி அளவு தயிர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  2. கடலைப்பருப்பை கழுவி ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் இஞ்சி பூண்டு விழுது தயிர் பட்டை கிராம்பு மற்றும் ஏலம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
  5. அதோடு ஊற வைத்த கறிக் கலவையைச் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் போட்டு வேக விடவும்.
  6. கறி முக்கால் பதமாக வெந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கடலைப்பருப்பை தண்ணீரை விட்டு வடித்து எடுத்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் 2 விசில் போட்டு வேக விடவும். சுவையான கொத்துக்கறி குழம்பு தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்