வீடு / சமையல் குறிப்பு / நெஞ்செலும்பு சால்னா

Photo of KEEL BONE CURRY by Munsila Fathima at BetterButter
1314
3
0.0(0)
0

நெஞ்செலும்பு சால்னா

Dec-22-2017
Munsila Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெஞ்செலும்பு சால்னா செய்முறை பற்றி

வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. எலும்புகளுக்கு வலிமை. இடியாப்பம், சாதத்திற்கு பொருந்தும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெஞ்சு எலும்பு - 150 gm ( மட்டன் )
  2. மஞ்சள் தூள் - 1/ 4 தேக்கரண்டி
  3. மல்லி - 1 - 11/2 மேஜைக்கரண்டி
  4. சீரகம் - 1 - 11/2 தேக்கரண்டி
  5. மிளகு - 1 தேக்கரண்டி
  6. தேங்காய் - 2 துண்டுகள்
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய்- 2
  9. உப்பு - தேவைக்கேற்ப
  10. தாளிக்க:
  11. நல்லெண்ணெய்
  12. சின்ன வெங்காயம்
  13. கருவேப்பிலை
  14. மிளகாய் தூள் - 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நெஞ்செலும்பை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  2. மல்லி, சீரகம், மிளகு சற்று வறுத்து கொள்ளுங்கள்.
  3. அதை தேங்காய் , மஞ்சள் உடன் சேர்த்து மைய அரைக்கவும்.
  4. குக்கரில் நெஞ்செலும்புடன், அரைத்த விழுது, இஞ்சி பூண்டு, உப்பு , பச்சை மிளகாய் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடம் வேக விடுங்கள் .
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கி வரும் சமயம் மிளகாய் தூள் சேர்த்து உடனடியாக சால்னா மேலே ஊற்றுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்