உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டைக் குழம்பு

Photo of Mutton kofta curry by Asiya Omar at BetterButter
0
6
0(0)
0

மட்டன் கோலா உருண்டைக் குழம்பு

Dec-22-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கோலா உருண்டைக் குழம்பு செய்முறை பற்றி

கோலா உருண்டை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்,அதன் சுவையே தனி தான், கொத்திய கறியை சில பொருட்கள் சேர்த்து அரைத்து குழம்பில போட்டு இந்த முறையில் செய்யவும்.உருண்டைகள் உடையாது.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருண்டை பிடிக்க தேவையான பொருட்கள் :
  2. கொத்துக்கறி -1/4 கிலோ
  3. நறுக்கிய பெரிய பச்சை மிளகாய் -1
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. கறி.மசாலா - அரை தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  7. நறுக்கிய மல்லி இலை -1 மேஜைக்கரண்டி
  8. பொட்டுக்கடலை மாவு 2 மேஜைக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு.
  10. கிரேவிக்கு தேவையான பொருட்கள் :
  11. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  12. சோம்பு - அரை தேக்கரண்டி
  13. ஏலம்,பட்டை,கிராம்பு - தலா 2 எண்ணம்
  14. வெங்காயம் நறுக்கியது -1
  15. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  16. அரைக்க தே.பொ:-
  17. தேங்காயத் துருவல் - 2 மேஜைக்கரண்டி -
  18. முந்திரி பருப்பு-4
  19. தக்காளி - 1
  20. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  21. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  22. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
  23. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  24. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  25. உப்பு - தேவைக்கு.
  26. அலங்கரிக்க - மல்லி இலை.

வழிமுறைகள்

  1. கொத்துக்கறியை அலசி தண்ணீர் வடிக்கவும். நந்கு பிழிந்து அத்துடன்,நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது, கரம் மசால் பொடி,மல்லி இலை சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  2. சுவைக்கு உப்பு சேர்த்து அத்துடன் பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து கலந்து உருண்டையாகப் பிடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்ட சூடானவுடன்,ஏலம்,பட்டை,கிராம்பு,சோம்பு போட்டு பொரிய விட்டு வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும். அடுத்து அரைத்த விழுது சேர்க்கவும்.
  3. தேவைக்கு 2 கப் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தயாராக உள்ள மட்டன் உருண்டைகளைப் போடவும். மூடி 15 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் நறுக்கிய மல்ல இலை தூவி அலங்கரிக்கவும். சுவையான மட்டன் கோலா உருண்டைக் குழம்பு தயார்.
  4. சூடான சோறு,புலாவ்,சப்பாத்தி,நாண் உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்