ஆலூ கோபி | Aloo Gobi in Tamil

எழுதியவர் Muthulakshmi Madhavakrishnan  |  22nd Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Aloo Gobi recipe in Tamil,ஆலூ கோபி, Muthulakshmi Madhavakrishnan
ஆலூ கோபிMuthulakshmi Madhavakrishnan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

3 votes
ஆலூ கோபி recipe

ஆலூ கோபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo Gobi in Tamil )

  • 1 சிறிய காலிஃப்ளவர்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

ஆலூ கோபி செய்வது எப்படி | How to make Aloo Gobi in Tamil

  1. காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும்.
  2. உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
  3. 2 லிட்டர் சிறிய பிரஷர் குக்கரில் அல்லது பேனில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  4. பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. அவை வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து கைவிடாமல் வதக்கவும்.
  6. உருளைக்கிழங்கு வதங்கியதும் வடிகெட்டிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சமமாக கிளறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளலாம்.
  8. மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  9. இப்போது குக்கரின் மூடியை‌ போடுங்கள். மிக குறைந்த தீயில் வைக்கவும்.
  10. லேசாக ஆவி வரும் போது குக்கரின் விசிலை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  11. 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு கை கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.

எனது டிப்:

இந்த ஆலூ கோபிக்கு தண்ணீர் விடாமல் செய்யவும். எண்ணெய் கொஞ்சம் அதிகமாக வைத்து காய்கறிகளை வதக்கவும்.

Reviews for Aloo Gobi in tamil (0)