Photo of Aloo Gobi by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
808
3
0.0(0)
0

ஆலூ கோபி

Dec-22-2017
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலூ கோபி செய்முறை பற்றி

காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் மிகவும் எளிமையான சைட் டிஷ். வீட்டிலேயே மிகவும் சுலபமாக ஹோட்டல் ஸ்டைல் ஆலூ கோபி செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 சிறிய காலிஃப்ளவர்
  2. 2 உருளைக்கிழங்கு
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  8. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும்.
  2. உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
  3. 2 லிட்டர் சிறிய பிரஷர் குக்கரில் அல்லது பேனில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  4. பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. அவை வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து கைவிடாமல் வதக்கவும்.
  6. உருளைக்கிழங்கு வதங்கியதும் வடிகெட்டிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சமமாக கிளறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளலாம்.
  8. மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
  9. இப்போது குக்கரின் மூடியை‌ போடுங்கள். மிக குறைந்த தீயில் வைக்கவும்.
  10. லேசாக ஆவி வரும் போது குக்கரின் விசிலை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  11. 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு கை கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்