வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை வத்தகுழம்பு

Photo of Murungakeerai Vathakuzhambu by Neeru Srikanth at BetterButter
515
5
0.0(0)
0

முருங்கைக்கீரை வத்தகுழம்பு

Dec-23-2017
Neeru Srikanth
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை வத்தகுழம்பு செய்முறை பற்றி

இரும்பு சத்து உள்ள முருங்கைக்கீரையை வைத்து செய்யும் ஒரு சுலபமான குழம்பு தான் முருங்கைக்கீரை வத்தகுழம்பு. இது முருங்கைக்காய் வத்தகுழம்பு போலவே சுவைக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கைக்கீரை இலைகள் 3/4 கப்
  2. நல்ல எண்ணெய் 8 டீஸ்பூன்
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. வெந்தயம் 1 டீஸ்பூன்
  5. கடலை பருப்பு 2 டீஸ்பூன்
  6. கருப்பு கொண்டக்கடலை 2 டீஸ்பூன்
  7. கோப்பாறை (சிறு துண்டுகள்) 2 டீஸ்பூன்
  8. வறுத்து தோல் உரித்த வேர்க்கடலை 2 டீஸ்பூன்
  9. பெருங்காய கட்டி சிறிது அளவு
  10. கருவேப்பிலை சிறிது அளவு
  11. சிவப்பு காய்ந்த மிளகாய் 1
  12. புளி ஒரு எலுமிச்சை அளவு
  13. தண்ணீர் 3 கப்
  14. மஞ்சள் தூள் 2 டீஸ்பூன்
  15. சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
  16. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. முருங்கை கீரை வத்தகுழம்பு செய்வதற்கு, முதலில் முருங்கை கீரையில் இருக்கும் இலைகளை காம்லிபிருந்து தனியாக எடுத்து நன்றாக தண்ணீரில் அலசவும். இந்த குழம்புக்கு 3/4 கப் இலைகள் தேவை.
  2. அடுத்ததாக புளியை 3 கப் தண்ணீரில் கரைத்துவைத்து கொள்ளவும்.
  3. ஒரு கல்சட்டியை அடுப்பில் சிம்மில் வைத்து அதில் 4 டீஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயத்தை பொட்டு நன்றாக வறுக்கவும்.
  5. நல்ல நறுமணம் வந்த பிறகு அதில் பெருங்காயம், கடலை பருப்பு, கருப்பு கொண்டைக்கடலை, கொப்பரை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
  6. அதன் பிறகு, வறுத்து தோல் இல்லாத வேர்க்கடலை, சிவப்பு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
  7. இதன் மீது, கரைத்த புளி தண்ணீர், மஞ்சள் தூள்,சாம்பார் பொடி, உப்பு போட்டு, 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக புளி வாசனை போகும் வரை மீடியம் பிளேமில் காசில் கொதிக்க வைக்கவும். இதற்கு சுமார் 8 - 10 நிமிடங்கள் ஆகும்.
  8. காஸ் அணைத்து அதன் பிறகு முருங்கை கீரை இலைகளை போட்டு உடனே மூடி வைக்கவும். 10 நிமிடங்களுக்கு குழம்பை திறக்காமல் முருங்கை இலைகலை அந்த சூட்டில் வேக விடவும்.
  9. முருங்கை கீரை வத்தகுழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்