கோபி மட்டர் | Gobi Mattar in Tamil

எழுதியவர் neela karthik  |  23rd Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Gobi Mattar by neela karthik at BetterButter
கோபி மட்டர்neela karthik
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

6 votes
கோபி மட்டர் recipe

கோபி மட்டர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Gobi Mattar in Tamil )

 • காலி பிளவர் 1/2 கப்
 • உருளைகிழங்கு 1
 • பட்டாணி 1/4 கப்
 • எண்ணெய் தாளிக்க
 • உப்பு தேவைக்கேற்ப
 • சீரகம் 1/4 ஸ்பூன்
 • மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
 • கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
 • ஆம்சூர் பவுடர் 1 ஸ்பூன்
 • கரம் மசால் தூள் 1/2 ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 • வெங்காயம் 1
 • தக்காளி 2

கோபி மட்டர் செய்வது எப்படி | How to make Gobi Mattar in Tamil

 1. வெங்காயம் தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்
 2. காலிபிளவர் உருளைகிழங்கு மட்டர் இவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 முதல் 7 நிமிடம் விடவும்
 3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து அரைத்த வெங்காய விழுதை வதக்கவும்
 4. பச்சை வாசம் போனதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
 5. அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
 6. அவற்றுடன் மசால் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
 7. 5 நிமிடம் கழித்து காலிபிளவர் உ.கிழங்கு மட்டர் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து மூடி வைக்கவும்
 8. மசால் காய்களுடன் கலந்ததும் இறக்கி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

எனது டிப்:

ஆம்சூர் பவுடருக்கு பதிலாக லெமன் ஜூஸ் பயன்படுத்தலாம் காய்கறிகளை எண்ணெயில் வதக்கியதும் சேர்க்கலாம்

Reviews for Gobi Mattar in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.