வீடு / சமையல் குறிப்பு / கோபி மஞ்சூரியன்

Photo of Gobhi Manchurian by Anushka Basantani at BetterButter
2425
613
4.7(0)
0

கோபி மஞ்சூரியன்

Jul-06-2015
Anushka Basantani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • ஃப்யூஷன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் சோளமாவு
  2. 5 தேக்கரண்டி மைதா
  3. 1/2 கப் தண்ணீர்
  4. 1 தேக்கரண்டி அரிசி மாவு
  5. 1 நடுத்தர அளவுள்ள கோபி சிறுசிறு பூக்களாக நறுக்கப்பட்டது
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  8. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  9. 2 பச்சை மிளகாய்க்ள் நறுக்கப்பட்டது
  10. 1 நடுத்தர அளவுள்ள குடமிளகாய் நறுக்கப்பட்டது
  11. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  12. 1/2 தேக்கரண்டி மிளகாய் சாஸ்
  13. 1 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  14. 1/2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் தூள் அல்லது நாட்டு மிளகாய்
  15. ஸ்பிரிங் ஆனியன் 1 இன்ச் துண்டுகளாக நறுக்கப்பட்டது

வழிமுறைகள்

  1. பூக்களை நன்றாக அலசிக்கொள்க. கொதிக்கும் நீரில் உப்புடன் பூக்களையும் சேர்த்து மிதமானத் தீயில் 10-15 நிமிடங்கள் வைக்கவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  2. அரிசி மாவு, மைதா, சோள மாவு, உப்பு, இஞ்சிப்பூண்டு விழுது ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க. தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அப்போதுதான் கலவை பாதி அடர்த்தி பதத்தை அடையும். மாவில் எல்லா பூக்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க.
  3. வானலியில் எண்ணெணை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க. கவனமாக 6-9 பூக்களைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  4. 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி, இஞ்சிப்பூண்டு விழுது, வெங்காயம், குடமிளகாய் சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  5. சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், உப்பு, நாட்டு மிளகாய் சேர்க்கவும். ஒன்றல்லது இரண்டு நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
  6. பூக்களை சாசில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  7. ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாயால் அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்