பட்டர் கேக் | Butter Cake in Tamil

எழுதியவர் Nafeesa Buhary  |  23rd Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Butter Cake by Nafeesa Buhary at BetterButter
பட்டர் கேக்Nafeesa Buhary
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

6

0

பட்டர் கேக் recipe

பட்டர் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter Cake in Tamil )

 • பட்டர் - 200g
 • பொடித்த சர்க்கரை 200g
 • மைதா 200g
 • முட்டை 2
 • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டியளவு
 • வெண்ணிலா எஸ்சன்ஸ் 2 தேக்கரண்டியளவு
 • பால் 1/2 கப்

பட்டர் கேக் செய்வது எப்படி | How to make Butter Cake in Tamil

 1. பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
 2. பின்னர் முட்டை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
 3. பட்டர், சர்க்கரை மற்றும் முட்டை ஒன்றாக கலந்ததும் வெண்ணிலா எஸ்சன்ஸ் சேர்க்கவும்
 4. மைதா மாவில் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 5. பின்னர் பீட் செய்து வைத்திருக்கும் கலவையுடன் மைதா + பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு மரக் கரண்டியால் மாவை கட்டி வராமல் மிக்ஸ் பண்ணவும்
 6. பேக்கிங் டிரெயில் பட்டர் மற்றும் மைதா தடவிய பின் கேக் கலவையை ஊற்றவும்
 7. ஓவனில் 180c யில் 20-30 நிமிடங்கள் (அல்லது) பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.

எனது டிப்:

மைதா மாவு சேர்க்கும்போது பீட்டர் பயன்படுத்த கூடாது . கரண்டியால் மாவை கட்டி வராமல் மிக்ஸ் பண்ணவும்.

Reviews for Butter Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.