வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் குருமா

Photo of Vegetable Kuruma by Surya Rajan at BetterButter
403
4
0.0(0)
0

வெஜிடபிள் குருமா

Dec-23-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

வெஜிடபிள் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் : 1
  2. தக்காளி : 1
  3. கேரட் : 1
  4. உருளை கிழங்கு : 1
  5. பீன்ஸ் : 5
  6. பட்டாணி : ¼ kg
  7. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா  : ½ மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  11. உப்பு : தேவையான அளவு
  12. இஞ்சி பூண்டு விழுது : 1
  13. பட்டை : 1
  14. கிராம்பு : 2
  15. கல்பாசி : சிறிதளவு
  16. ஏலக்காய் : 1
  17. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  18. அரைக்க
  19. தேங்காய் துருவல் : 4 - 5 மேஜைக்கரண்டி
  20. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  21. மிளகாய் : 1 - 2

வழிமுறைகள்

  1. குக்கரில் கேரட் , பீன்ஸ் , உருளை கிழங்கு , பட்டாணி ஆகியவற்றை 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி ,நறுக்கிய வெங்காயம் , தக்காளி யை 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள் , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு மற்றும் வேக வைத்த காய்கறிகளை அத்தண்ணீருடன் சேர்த்து 2 - 3 நிமிடம் வேக விடவும் .
  5. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்