BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Plantain flower veg fish curry

Photo of Plantain flower veg fish curry by Subashini Krish at BetterButter
0
5
5(1)
0

Plantain flower veg fish curry

Dec-23-2017
Subashini Krish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • కఠినము
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిన్న మంట పై ఉడికించటం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நடுத்தரமான வாழைப்பூ 1
  2. சின்ன வெங்காயம் 150 கிராம்
  3. தக்காளி 2
  4. பூண்டு 10 பல்
  5. தேங்காய் துருவியது 1 கப்
  6. வெந்தயம் 1 டீஸ்பூன்
  7. சீரகம் டீஸ்பூன்
  8. கடலைப்பருப்பு 1டீஸ்பூன்
  9. கசகசா 1 டீஸ்பூன்
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. சோம்பு 1/2 டீஸ்பூன்
  12. வரமிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  13. கொத்தமல்லி தூள் 3 டீஸ்பூன்
  14. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. புளி எலுமிச்சை அளவு
  17. கடலை மாவு 2 கைப்பிடி
  18. அரிசிமாவு 1 கைப்பிடி
  19. கறிவேப்பிலை சிறிது
  20. எண்ணெய் பொரிப்பதற்கு
  21. நல்லெண்ணெய் 50 மில்லி

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு,வரமிளகாய் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து வாழைப்பூவில் பிசறி வைக்கவும்
  3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், சீரகம்,கசகசா,10 சின்ன வெங்காயம்,1 தக்காளி,தேங்காய் ஆகியவற்றை முறையே சேர்த்து நன்கு வதக்கவும்
  4. ஆறிய பின் விழுதாக அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் நல்லெண்ணய் ஊற்றி கடுகு தாளித்து, சோம்பு பொரிந்ததும் வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  7. மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்
  8. எண்ணெய் தெளிந்த பின் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  9. புளியை நீர்க்க கரைத்து ஊற்றவும்
  10. குறைந்த தீயில் வைத்து குழம்பை எண்ணெய் தெளியும் வரை கொதிக்க விடவும்
  11. குழம்பு கொதிப்பதற்குள் பிசறி வைத்த வாழைப்பூவை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்
  12. குழம்பு பச்சை வாசனை போக கொதித்த பின் பொரித்த வாழைப்பூக்களை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Krishnakumar Chandrasekaran
Dec-23-2017
Krishnakumar Chandrasekaran   Dec-23-2017

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்