Photo of Fish curry (coconut added) by Asiya Omar at BetterButter
1023
3
0.0(2)
0

Fish curry (coconut added)

Dec-23-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வஞ்சிரம் மீன் - அரைக்கிலோ
  2. பெரிய வெங்காயம் - 2
  3. தக்காளி -2
  4. பச்சை மிளகாய் -4
  5. புளி - எலுமிச்சை அளவு ( சுவைக்கேற்ப)
  6. மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி
  7. வீட்டு குழம்பு மசாலா - 2 - 3 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய் -5 மேஜைக்கரண்டி
  9. கடுகு,உளுத்தம் பருப்பு -தலா 1 தேக்கரண்டி
  10. வெந்தயம் - அரை தேக்கரண்டி
  11. கருவேப்பிலை -2 இணுக்கு
  12. உப்பு - தேவைக்கு.
  13. நறுக்கிய மல்லி இலை - சிறிது.
  14. அரைக்க :-தேங்காய்த்துருவல் -4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.
  2. புளி கரைத்து வைக்கவும்.வெங்காயம் பூண்டு மிகப் பொடியாக நறுக்கவும்.
  3. தக்காளி விழுதாக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு சட்டியில் எண்ணெய் விடவும். சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.
  5. அடுத்து தக்காளி விழுது சேர்க்கவும்.
  6. நன்கு வதக்கவும்.மிளகாய்த்தூள் மசாலாத்தூள் சேர்க்கவும்.
  7. பிரட்டி விடவும். எண்ணெய் பிரியும் பொழுது புளித்தண்ணீர் விடவும்.
  8. நன்கு கலந்து விடவும்.
  9. உப்பு சேர்க்கவும்.கொதிக்க விடவும்.
  10. புளி,மசாலா வாடை அடங்க வேண்டும்.
  11. மீன் துண்டுகள் போடவும்.போட்டவுடன் அகப்பை போட்டு பிரட்டி ஒரு முறை விடவும்.
  12. அதன் பின்பு அகப்பை போடக் கூடாது.மீன் உடைந்து விடும்.
  13. சட்டியை இரு பக்கமும் பிடித்து உலச வேண்டும்.
  14. மீன் துண்டுகள் குழம்பில் மூழ்கி வேக ஆரம்பிக்கும்.மீன் துண்டுகள் மூழ்கும் அளவு குழம்பு வைக்க வேண்டும்.
  15. மீன் வெந்து வரும் பொழுது சிறிது மல்லி இலை சேர்த்து அரைத்த தேங்காயும் சேர்க்கலாம்.
  16. சிறிது தேவைக்கு தண்ணீர் கலக்கவும்.
  17. நன்கு கொதிக்க விடவும்.சிம்மில் வைக்கவும்.
  18. மீன் குழம்பு தயார்.அடுப்பை அணைக்கும் முன்பு சிறிது மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
  19. சுவையான மீன் குழம்பு தயார்.
  20. ஒரு பவுலில் எடுத்து பரிமாறவும்.சூடான சோறு குழம்பு இதற்கு மேல் என்ன வேண்டும்.
  21. இப்படி பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
barakath nisha
Nov-25-2020
barakath nisha   Nov-25-2020

Pushpa Taroor
Dec-24-2017
Pushpa Taroor   Dec-24-2017

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்