வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு சாம்பார்

Photo of Kadalai Mavu Sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
700
3
0.0(0)
0

கடலைமாவு சாம்பார்

Dec-24-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு சாம்பார் செய்முறை பற்றி

தோசைக்கு அல்லது இட்லிக்கு தொட்டுக்கொள்ள மிளகாய் பொடியா? என்று கேட்கும் போது ஐய்யோ சாம்பார் செய்ய டைம் ஆகுமே அதுக்குள்ளே பசி மீறி போய்விடுமே! கவலை வேண்டாம் கை கொடுக்கும் இந்த சாம்பார். தோசை கல்லு காய்ந்து ஒரு தோசை வார்த்து எடுக்கும் முன்பு அல்லது இட்லிக்கு மாவு விட்டு வேகும் முன்பாகவே இந்த சாம்பார் செய்து விடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 1 பெரியது
  2. தக்காளி - 2 பெரியது
  3. பச்சமிளகாய்-1 சிறிது
  4. கரைப்பதற்கு தேவையானவை:
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  7. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  8. காரப்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  9. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  10. கடலைமாவு - 2 மேஜைகரண்டி
  11. புளி பேஸ்ட்- 1/2தேக்கரண்டி(விருப்பப்பட்டால்)
  12. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  13. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  14. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 2
  16. பெருங்காயம் - 2 சிட்டிகை
  17. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  18. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  19. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பச்ச மிளகாய் நறுக்கி வைக்கவும்
  2. கரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் விட்டு கெட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  4. வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும் . பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதிக்கவிடவும்
  6. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான கடலைமாவு சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்