வீடு / சமையல் குறிப்பு / மண்சட்டி வத்தக்குழம்பு

Photo of Manchatti Vathakuzhambu by Sowmya Sundar at BetterButter
360
3
0.0(0)
0

மண்சட்டி வத்தக்குழம்பு

Dec-24-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மண்சட்டி வத்தக்குழம்பு செய்முறை பற்றி

அரைச்சு விட்ட வத்தக்குழம்பே ருசி தான்! அதை மண் சட்டியில் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல் - ஒரு பிடி
  2. புளி எலுமிச்சை அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
  5. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  6. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  7. கடுகு 1 டீஸ்பூன்
  8. வெந்தயம் 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. வறுத்து அரைக்க:
  11. கடலைப்பருப்பு- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  12. துவரம் பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
  13. மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
  14. வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
  15. மிளகாய் வற்றல்- 6

வழிமுறைகள்

  1. சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க தேவையான பொருட்களை சிவக்க வறுத்து கொள்ளவும்.
  2. அதை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் ,ஒரு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து மணத்தக்காளி ,சுண்டைக்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்
  4. அதில் புளி கரைசல் மஞ்சள் தூள் உப்பு பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து திக்காக ஆகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்