வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை குழம்பு

Photo of Curry Leaves Kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
538
3
0.0(0)
0

கருவேப்பிலை குழம்பு

Dec-24-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை குழம்பு செய்முறை பற்றி

உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது கருவேப்பிலை . தாளிக்கும்போது போடப்படும் கருவேப்பிலையை சாப்பிடாமல் தனியே எடுத்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த குழம்பில் பொடி செய்து சேர்ப்பதால் முழுவதுமாக சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. புளி - ஒருநெல்லிக்காய்அளவு
  4. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 1/4 தேக்கரண்டி
  6. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  7. தாளிக்க : கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  11. மிளகாய் வத்தல் - 1
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  14. வறுத்து அரைக்க :
  15. கருவேப்பிலை - இலைகளாக இரண்டு கைப்பிடி அளவு
  16. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  17. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  18. பெருங்காயம் - 2 சிட்டிகை
  19. மிளகாய் வத்தல் - 4
  20. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயம் மிளகாய்வத்தல் வறுக்கவும்
  2. அதே கடாயில் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. இரண்டையும் ஆற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. தக்காளி வெங்காயம் நறுக்கி வைக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  6. பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்
  7. புளி கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவிடவும்
  8. வறுத்து திரித்ததை சேர்த்து ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும்
  9. முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும் . சுவையான கருவேப்பிலை குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்