வீடு / சமையல் குறிப்பு / Barracuda Fish Gravy with Tamarind Paste

Photo of Barracuda Fish Gravy with Tamarind Paste by Hameed Nooh at BetterButter
687
5
0.0(1)
0

Barracuda Fish Gravy with Tamarind Paste

Dec-24-2017
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீலா மீன் - கால் கிலோ
  2. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 1
  8. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  9. பூண்டு - 6 பற்கள்
  10. கடுகு - 1 தேக்கரண்டி
  11. தேங்காய் பால் - 1/2 கப்
  12. தேங்காய்ப் பொடி - 1 மேசைக்கரண்டி
  13. கறிவேப்பிலை - 1 கீற்று
  14. நல்லெண்ணெய் -2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிறிது எண்ணெய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. புளியை தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக பிசைந்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. வடித்த புளிக் கரைசலில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக பிசைந்து 2 கப் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
  4. அதில் நறுக்கிய மூன்று பூண்டு பற்கள் 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.
  5. தேங்காய் பாலில் தேங்காய் பொடியை கலக்கி அதையும் ஊற்றி ஊற வைத்த மீனை போட்டு 10 நிமிடங்கம் வைக்கவும்.
  6. அதனை ஒரு மண் சட்டியில் ஊற்றி மேலே ஒரு தட்டால் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  7. மீனை வேக வைக்கும் அதே நேரத்தில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் உரலில் சற்று இடித்த பூண்டு வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
  8. மீன் வெந்ததும் தாளிப்பை மீன் குழம்பில் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-24-2017
Pushpa Taroor   Dec-24-2017

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்