வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பிலைக் குழம்பு

Photo of Kariveppilai kuzhambu by Adhi Venkat at BetterButter
39
3
0.0(0)
0

கறிவேப்பிலைக் குழம்பு

Dec-24-2017
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கறிவேப்பிலைக் குழம்பு செய்முறை பற்றி

சாம்பாரில் கறிவேப்பிலை போட்டால்நிறைய பேர் அப்படியே எடுத்து தூக்கிப்போட்டு விடுவார்களே. அதுபோன்றவர்களுக்கு ஏற்ற ஒரு சமையல்குறிப்பு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உதிர்த்த கறிவேப்பிலை – 2 கப்
  2. புளி – எலுமிச்சை அளவு
  3. மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. தாளிக்க:
  6. கடுகு – அரை டீஸ்பூன்
  7. வெந்தயம் – அரை டீஸ்பூன்
  8. நல்லெண்ணெய் – கால்  கப்
  9. வறுத்து அரைக்க:
  10. மிளகாய் – 8 [அதிக காரம்வேண்டுமெனில் கூடஒன்றிரண்டு சேர்க்கலாம்]
  11. கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  12. துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
  13. உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
  14. சீரகம் – 1 டீஸ்பூன்
  15. பெருங்காயம் – அரை டீஸ்பூன்
  16. எண்ணெய் – 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கறிவேப்பிலையை மொத்தமாக போடாமல், சிறிது சிறிதாய் வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  2. வறுக்கக் கொடுத்துள்ளபொருட்களை, வாணலியில்சிறிது எண்ணெயை காயவைத்து ஒன்றாக சிவக்க வறுத்து    கறிவேப்பிலையுடன் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  3. புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் பொடித்த பொடி,மஞ்சள்தூள் உப்பு சேர்த்துகரைத்துக் கொள்ளவும்.
  4. நன்கு கொதித்துகெட்டியானதும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்