வீடு / சமையல் குறிப்பு / பருப்புருண்டைக் குழம்பு

Photo of Paruppurundai kuzhambu by Adhi Venkat at BetterButter
777
4
0.0(0)
0

பருப்புருண்டைக் குழம்பு

Dec-24-2017
Adhi Venkat
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்புருண்டைக் குழம்பு செய்முறை பற்றி

பருப்புருண்டைக் குழம்பு ஒருபாரம்பரியக் குழம்பு வகையை சேர்ந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு – ½ கப்
  2. கடலைப்பருப்பு – ½ கப்
  3. வரமிளகாய் – 2 (அ) 3
  4. சீரகம் – ½ தேக்கரண்டி
  5. பெருங்காயம் – சிறிதளவு
  6. கறிவேப்பிலை – சிறிதளவு
  7. கொத்தமல்லி – சிறிதளவு
  8. உப்பு – தேவையான அளவு
  9. தேங்காய்த் துருவல் – சிறிதளவு
  10. புளி – எலுமிச்சையளவு
  11. தக்காளி – 1
  12. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
  13. கடுகு – ½ தேக்கரண்டி
  14. வெந்தயம் – சிறிதளவு
  15. எண்ணெய் – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம்தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. புளியைத்தண்ணீரில் ஊறப்  போடவும்.
  3. ஊறிய பருப்புகளை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் வரமிளகாய், சீரகம், பெருங்காயம், கொஞ்சமாக கறிவேப்பிலை, கொத்தமல்லி  சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 
  4. அதனுடன் இந்த விழுதுக்கு தேவையான உப்பையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  5. வாணலியில் சிறிதளவுஎண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள்பிரட்டி அடுப்பை நிறுத்தவும்.
  6. தண்ணீர் பசை அதிகமாக இருந்தால் உருண்டைகளை குழம்பில்  போட்டவுடன் கரைந்து விடும்.
  7. அதனால் தான் வாணலியில் இரண்டு நிமிடங்கள் பிரட்டுகிறோம்.  ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்…
  8. அடிகனமான வாயகன்ற  பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  9. தக்காளியை நான்காக வெட்டிப் போட்டு வதக்கவும். இதில் புளியை கரைத்து விட்டு, உப்பு,  சாம்பார்பொடி, மஞ்சள்தூள்  சேர்க்கவும்.உருண்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் கொஞ்சம் கூடுதலாகவே விடவும். 
  10. புளிக்கரைசல் கொதித்து பச்சை வாசனை போனதும் உருண்டைகளைஒவ்வொன்றாக குழம்பில் போடவும்.முதலில் ஒன்றைப் போட்டு  கரைகிறதா எனப் பார்த்து விட்டு அடுத்தடுத்துப்போடவும்.
  11. எல்லா உருண்டைகளையும் சேர்த்த பின் அதிகம் கிளறாமல் நன்கு வேக விடவும்…
  12. நன்கு கொதித்த பின் குழம்பை இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்