வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் கொத்சு

Photo of Pumpkin kothsu by Sowmya Sundar at BetterButter
246
3
0.0(0)
0

பரங்கிக்காய் கொத்சு

Dec-24-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் கொத்சு செய்முறை பற்றி

எப்போதும் கத்திரிக்காயை வைத்து கொத்சு செய்வார்கள் .புதுமையாக பரங்கிக்காய் வைத்து செய்யலாம் இந்த கொத்சு .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் - 1 கப் நறுக்கியது
  2. வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
  3. தக்காளி-1 நறுக்கியது
  4. பச்சை மிளகாய்- 2
  5. புளி- நெல்லிக்காய் அளவு
  6. உப்பு
  7. கடுகு - 1 டீஸ்பூன்
  8. சீரகம்- 1 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  10. வெல்லம்- ஒரு துண்டு
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. எண்ணெய்- 2 டீஸ்பூன்
  14. வறுத்து பொடி செய்ய:
  15. கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  16. மிளகாய் வற்றல் - 2
  17. தனியா - 1 டேபிள் ஸ்பூன்
  18. பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க தேவையான அனைத்து பொருட்களையும் சிவக்க வறுக்கவும்.
  2. அதை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  3. காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம கறிவேப்பிலை் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மற்றும் பரங்கிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பு போடவும்.
  5. சிறிது வதங்கியதும் புளி கரைசல் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.வெல்லம் சேர்க்கவும்.
  6. பின்னர் வறுத்த பொடி சேர்த்து கெட்டியாக ஆகும் வரை கொதிக்க விட்டு மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்