Photo of Paneer chettinad Gravy by Asiya Omar at BetterButter
1154
5
0.0(1)
0

Paneer chettinad Gravy

Dec-25-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Paneer chettinad Gravy செய்முறை பற்றி

பனீரோடு செட்டிநாடு மசாலா சேரும் பொழுது சுவை செமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் -250 கிராம்
  2. நறுக்கிய் வெங்காயம் -1
  3. நறுக்கிய தக்காளி -1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  7. எண்ணெய் -2-3 மேஜைக்கரண்டி
  8. சோம்பு - கால் தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு.
  10. நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது.
  11. வறுத்து அரைக்க செட்டிநாடு மசாலா:-
  12. முழு மல்லி -ஒன்னரை தேக்கரண்டி
  13. மிளகு -1 தேக்கரண்டி
  14. சீரகம் -1 தேக்கரண்டி
  15. சோம்பு -1 தேக்கரண்டி
  16. காய்ந்த மிளகாய் வற்றல் -2
  17. ஏலக்காய் -1
  18. கிராம்பு -1
  19. பட்டை -சிறு துண்டு.

வழிமுறைகள்

  1. 2 தேக்கரண்டி எண்ணெய் சூடு செய்து வெங்காயம் தக்காளி வதக்கி ஆற விட்டு விழுதாக்கவும்.
  2. மேற்கூறிய செட்டிநாடு மசாலா வறுத்து அரைத்து வைக்கவும்.
  3. பனீர் துண்டுகளை ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.
  4. பனீர் செட்டிநாடு கிரேவி செய்ய அதே கடாயில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு,கருவேப்பிலை தாளிக்கவும்.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. அரைத்த வெங்காயம் தக்காளி விழுதும் சேர்த்து வதக்கவும்.உப்பு சுவைக்கு சேர்க்கவும்.
  6. மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
  7. அடுத்து வறுத்து பொடித்த செட்டிநாடு மசாலா சேர்க்கவும்.
  8. ஒரு சேர பிரட்டவும்.சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
  9. அடுத்து ப்ரை செய்து வைத்த பனீர் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
  10. நறுக்கிய மல்லி இலை,கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
  11. சுவையான செட்டிநாடு பனீர் கிரேவி தயார்.
  12. சூடான சாதம்,புலாவ்,சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-25-2017
Pushpa Taroor   Dec-25-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்