வீடு / சமையல் குறிப்பு / முகலாய் தாலில் உருளைக்கிழங்கு கோப்தாக்கள்

Photo of Potato Koftas In Mughlai Dal Curry by Hameed Nooh at BetterButter
46
4
0.0(0)
0

முகலாய் தாலில் உருளைக்கிழங்கு கோப்தாக்கள்

Dec-25-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முகலாய் தாலில் உருளைக்கிழங்கு கோப்தாக்கள் செய்முறை பற்றி

முகலாயர்கள் சமையல் எப்பொழுதுமே மிகவும் ரிச்சாக இருக்கும். முந்திரி மற்றும் க்ரீம் சேர்ப்பதால் சுவையும் அதிகமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • முகலாய்
 • பிரெஷர் குக்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. தால் கறி செய்ய :
 2. பாசிப் பருப்பு - 1/4 கப்
 3. மசூர் பருப்பு - 1/4 கப்
 4. வெங்காயம் - 2
 5. பூண்டு - 4 பற்கள்
 6. முந்திரி - 10
 7. தேங்காய் துருவல் - 1/2 கப்
 8. க்ரீம் - 2 மேசைக்கரண்டி
 9. சீரகம் - 1 தேக்கரண்டி
 10. காய்ந்த மிளகாய் - 1
 11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 12. கடுகு - 1 தேக்கரண்டி
 13. கருவேப்பிலை - 8 இலைகள்
 14. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 15. உப்பு - சுவைக்கேற்ப
 16. கோப்தா செய்ய :
 17. உருளைக்கிழங்கு - 2
 18. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 19. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 20. பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
 21. முந்திரி - 6
 22. உளர் திராட்சை - 6
 23. சோள மாவு - 1 மேசைக்கரண்டி
 24. உப்பு - சுவைக்கேற்ப
 25. நெய் - 1 மேசைக்கரண்டி
 26. எண்ணெய் - பொறிக்க

வழிமுறைகள்

 1. இரு வகை பருப்புகளையும் கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
 2. பருப்போடு நறுக்கிய தக்காளி வெங்காயம் முந்திரி தேங்காய் துறுவல் பூண்டு மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
 3. காய்ந்த மிளகாயை அடுப்பு தனலில் காட்டி பிறகு உள்ளே உள்ள விதையை நீக்கி மிளகாயை பருப்போடு சேர்த்து 3 விசில் போட்டு வேக விடவும்.
 4. ஆறியதும் பருப்பை கடைந்து அதோடு கரீம் சேர்க்கவும்.
 5. உருளைக்கிழங்கை அவித்து தோல் நீக்கி கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
 6. அதோடு கரம் மசாலா மிளகாய் தூள் பேக்கிங் சோடா சோள மாவு உப்பு சேர்த்து மாவாக உருட்டிக் கொள்ளவும்.
 7. கையில் எண்ணெய் தடவி சிறிது மாவை எடுத்து வட்டமாக தட்டி அதில் உள்ளே பொடித்த முந்திரி திராட்சை வைத்து வெடிப்பில்லாமல் வட்டமாக பிடிக்கவும்.
 8. இதை நெய் சேர்த்த எண்ணெய்யில் இருபுறமும் வேகுமாறு பொறித்தெடுக்கவும்.
 9. ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
 10. கோப்தாக்களை பரிமாறுவதற்கு சற்று முன்னால் தாலில் சேர்த்து தாளிப்பை மேலே ஊற்றி சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்