வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை கிரேவி

Photo of chickpeas gravy by Surya Rajan at BetterButter
791
4
0.0(0)
0

கொண்டைக்கடலை கிரேவி

Dec-25-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை கிரேவி செய்முறை பற்றி

கொண்டைக்கடலை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொண்டைக்கடலை : தேவையான அளவு
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  5. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை : சிறிதளவு
  7. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  9. உப்பு : தேவையான அளவு
  10. இன்ஜி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  11. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  12. அரைக்க
  13. தேங்காய் துருவல் : 3 - 4 மேஜைக்கரண்டி
  14. சீரகம் : ½ மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலை 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். ( முளை கட்டியதென்றால் என்றால் 5 நிமிடம் போதும் ….காய்ந்தது என்றால் 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் வேக வைக்கவும் )
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பின் கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  3. பின் தக்காளி சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , கரம் மசாலா , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் வேக வைத்த கொண்டைக்கடலை, உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  6. பின் அரைத்த தேங்காய் விழுது ( தேங்காய் + சீரகம் ) சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்