வீடு / சமையல் குறிப்பு / காய்கறி சாகு

Photo of Vegetable Sagu by Asiya Omar at BetterButter
574
3
0.0(0)
0

காய்கறி சாகு

Dec-25-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காய்கறி சாகு செய்முறை பற்றி

பச்சை நிற கிரேவில் காய்கறிகள், செமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கர்நாடகா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கேரட் -100;கிராம்
  2. உருளைக்கிழங்கு -100 கிராம்
  3. பச்சை பட்டாணி -100 கிராம்
  4. காளிப்ளவர் -100 கிராம்
  5. ( காய்கறிகள் உங்கள் விருப்பம்)
  6. உப்பு - தேவைக்கு.
  7. தாளிக்க தே.பொ:-
  8. எண்ணெய் - 2-3 மேஜைக்கரண்டி
  9. கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  10. கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி
  11. நறுக்கிய வெங்காயம் -1
  12. கருவேப்பிலை -2 இணுக்கு.
  13. அரைக்க தே.பொ:-
  14. தேங்காய்த்துருவல் - அரை கப்
  15. பச்சைவ்மிளகாய் -3-4
  16. இஞ்சி நறுக்கியது - ஒரு இன்ச் துண்டு
  17. கொத்தமல்லி இலை -1 கையளவு
  18. பொட்டுக்கடலை -1மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கி அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. குக்கரில் காய்கறிகள்,ஒரு கப் நீர்,ருசிக்கு உப்பு சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுக்கவும்.
  3. ஆவியடங்கிய பின் திறக்கவும்.
  4. அரைக்க தேவையான பொருத்கள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  5. இனி தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி கடுகு,உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. அரைத்த விழுது சேர்த்து தேவைக்கு ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  7. காய்கறி வெந்தது சேர்க்கவும்.தண்ணீர் தேவையான கெட்டித்தன்மைக்கேற்ப சேர்க்கவும்.
  8. அடுப்பைக் குறைக்கவும்.எல்லாம் சேர்ந்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  9. இதனை இட்லி,தோசை,ஆப்பம்,இடியாப்பம்,பூரி,சப்பாத்தி,ரொட்டி, சூடான சாதம் கூடவும் பரிமாறலாம்.ஆல் இன் ஒன் கிரேவி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்