Photo of Kadalai Curry by Krishnasamy Vidya Valli at BetterButter
2421
3
0.0(0)
0

கடலை கறி

Dec-25-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலை கறி செய்முறை பற்றி

கேரளாவின் மிக முக்கியமான ஆப்பம் மற்றும் புட்டுக்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் இது. கொண்டகடலை ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கருப்பு கொண்டகடலை- 1 கப்
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பச்ச மிளகாய் - 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  6. எண்ணெய்-1தேக்கரண்டி
  7. உப்பு-11/4தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  9. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  10. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  11. வறுத்துஅரைக்க:
  12. தேங்காய் துருவல் - 1 / 2 கப்
  13. பெருஞ்சீரகம் - 1தேக்கரண்டி
  14. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 3
  16. பட்டை - 2 சிறிய துண்டு
  17. கிராம்பு - 4
  18. எண்ணெய்-1தேக்கரண்டி
  19. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  20. மிளகாய் வத்தல் - 1
  21. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  22. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்ட கடலை யை ஆறு மணி நேரம் வரை ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பச்ச வாசனை போனவுடன் வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வதக்கியதில் ஒரு கரண்டி மற்றும் ஒரு கரண்டி வேகவைத்த கொண்ட கடலை யை வறுத்ததுடன் மிக்ஸியில் சேர்க்கவும்
  6. சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்,
  7. ஏற்கனவே வதக்கியதுடன் மஞ்சள் பொடி தனியா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் உப்பு சேர்த்து வதக்கவும்
  8. வேகவைத்த கொண்ட கடலை யை சேர்க்கவும்
  9. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  11. தாளித்ததை கடலைக்கறியுடன் சேர்த்து பறிமாறவும் . ஆப்பம் புட்டு இடியாப்பம் எதனுடனும் பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்