வீடு / சமையல் குறிப்பு / டோஃபு காய்கறி கிரேவி

Photo of Tofu and Mixed Vegetables Gravy by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
673
4
0.0(0)
0

டோஃபு காய்கறி கிரேவி

Dec-25-2017
Muthulakshmi Madhavakrishnan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டோஃபு காய்கறி கிரேவி செய்முறை பற்றி

டோஃபு (சோயா பால் பனீர்) மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் கிரேவி. ஃபரைடு‌ ரைஸ், சீரகம் சாதம், நாண் போன்ற உணவு வகைகளுக்கு சூப்பரான ஸைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200 கிராம் டோஃபு
  2. 1/4 கப் கேரட்
  3. 1/4 கப் பீன்ஸ்
  4. 1/2 கப் குடைமிளகாய்
  5. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1 கப் தேங்காய் பால்
  7. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. உப்பு தேவையான அளவு
  10. அரைக்க
  11. 1/4 டீஸ்பூன் சீரகம்
  12. 3 காய்ந்த மிளகாய்
  13. 1/2 டீஸ்பூன் தனியா
  14. 4 பூண்டு பற்கள்
  15. 4 சின்ன வெங்காயம்
  16. 1 தக்காளி
  17. 1/4 கப் கொப்பரை தேங்காய் துருவல் அல்லது டெஸிகேட்டடு தேங்காய் பவுடர்

வழிமுறைகள்

  1. டோஃபுவை சுத்தமாக கழுவிக்கொண்டு மெதுவாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். பின் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் இளம் சூடான தண்ணீரில் நறுக்கிய டோஃபுவை போடவும். 5 நிமிடங்கள் கழித்து லேசாக பிழிந்து கொள்ளவும். ஒரு பேனில் சிறிது எண்ணெய் விட்டு டோஃபு வை வறுத்து தனியே வைக்கவும்.
  4. அதே பேனில் நறுக்கிய குடைமிளகாயை லேசாக வதங்கியதும் தனியே எடுத்து வைக்கவும்.
  5. கேரட் மற்றும் பீன்ஸை லேசாக வேகவைத்து எடுக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் வேகவைத்த பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.
  7. பின் தேவையான அளவு உப்பு வதக்கிய குடைமிளகாய் மற்றும் டோஃபுவை சேர்த்து வதக்கவும்.
  8. கடைசியாக தேங்காய் பால் சேர்த்து மிளகுத்தூள் தூவி லேசாக கொதித்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்