Photo of Crab curry by Asiya Omar at BetterButter
530
5
0.0(0)
0

நண்டு கறி

Dec-25-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு கறி செய்முறை பற்றி

இந்த நண்டு கறியில் எல்லாம் வறுத்து,வதக்கி,அரைத்து செய்வதால் மிகவும் அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுத்தம் செய்து உடைத்த நண்டு - 1 கிலோ
  2. எண்ணெய் -5 மேஜைக்கரண்டி
  3. கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
  4. உப்பு - தேவைக்கு.
  5. இனி வறுத்து,வதக்கி அரைக்க வேண்டியது:-
  6. சீரகம் - அரை தேக்கரண்டி
  7. மிளகு -1 தேக்கரண்டி
  8. சோம்பு -1 தேக்கரண்டி
  9. முழு மல்லி-2 தேக்கரண்டி
  10. இஞ்சி - சிறிய துண்டு
  11. பூண்டு- 6 பற்கள்
  12. பச்சை மிளகாய் -4 அல்லது 5
  13. நறுக்கிய சின்ன வெங்காயம் -200 கிராம்
  14. தக்காளி - 250 கிராம்
  15. நறுக்கிய மல்லி இலை - கொஞ்சம்.

வழிமுறைகள்

  1. முதலில் முழு மல்லி,சீரகம்,மிளகு,சோம்பு சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.அத்துடன் இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைக்கவும்.சுவைத்தால் அருமையான சட்னி போல் இருக்கும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
  4. சுத்தம் செய்து அலசிய நண்டு துண்டுகளைச் சேர்க்கவும்.
  5. பிரட்டி விட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
  6. 10 நிமிடத்தில் தயாராகிவிடும்.நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  7. இதற்கு தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.
  8. சுவையான நண்டு கறி தயார்.கல் தோசை,ஆப்பம்,சப்பாத்தி சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்