வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish Curry by Rabia Hamnah at BetterButter
278
5
0.0(0)
0

மீன் குழம்பு

Dec-25-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மனக்க மனக்க மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன்-1/2 கி
  2. சின்ன வெங்காயம் -10
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் -2
  5. புளி - எலுமிச்சை அளவு
  6. மசாலா பொடி-4 குழிக்கரண்டி
  7. பூண்டு-6 பல்
  8. கறிவேப்பிலை-தாளிக்க
  9. கடுகு, வெந்தயம், சோம்பு- தலா 1 ஸ்பூன்
  10. நல்லெண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளுடன் உப்பு, மசாலா பொடி சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்.
  2. புளியை ஊற வைத்து சாறு எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
  3. விரவி வைத்த மீனுடன் புளி தண்ணீர், நறுக்கிய வெங்காயம் , கீறிய பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து தேவைக்கு உப்பு+ மசாலா தூள் சேர்க்கவும்.
  4. தக்காளியை கைகளால் பிசைந்து சேர்க்கவும்.
  5. பின்பு அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்கவும்.
  6. பின் மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து கடுகு, வெந்தயம், சோம்பு சேர்த்து பொறிந்ததும் 2 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.
  7. பின்பு பூண்டுடன் பச்சை மிளகாய் சேர்த்து இடித்து தாளிப்பில் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கும் குழம்புடன் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்