வீடு / சமையல் குறிப்பு / Prawn curry

Photo of Prawn curry by Surya Rajan at BetterButter
0
5
5(1)
0

Prawn curry

Dec-26-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Prawn curry செய்முறை பற்றி

இறால்  குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இறால் (உங்களுக்கு விருப்பமானது)
  2. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 5
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  8. சீரக தூள்  : 1 மேஜைக்கரண்டி
  9. சோம்பு : 1 மேஜைக்கரண்டி
  10. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 ½  மேஜைக்கரண்டி + மல்லி தூள் : ½  மேஜைக்கரண்டி )
  11. புளி : நெல்லி அளவு
  12. முருங்கைகாய் : 1
  13. அரைக்க : (தேங்காய் விழுது )
  14. தேங்காய் : 1 கையளவு
  15. சின்ன வெங்காயம் : 5
  16. தாளிக்க :
  17. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  18. கருவேப்பிலை : சிறிதளவு
  19. சின்ன வெங்காயம் : 2
  20. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. இறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள்  சேர்த்து தனியே வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து வெங்காயம் (5 - 10) , தக்காளி, மிளகாய், முருங்கைக்காய்  சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சீரக தூள் , சோம்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  4. தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  5. பின் சுத்தம் செய்த இறால், உப்பு  சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும் .
  6. அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை அணைக்கவும் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-27-2017
Pushpa Taroor   Dec-27-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்