வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசால்

Photo of Potato Masal by Asiya Omar at BetterButter
326
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசால்

Dec-26-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசால் செய்முறை பற்றி

பூரி,சப்பாத்திக்கு இதை விட பெஸ்ட் காம்பினேஷன் உலகத்திலேயே இல்லை எனலாம்.அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த உருளக்கிழங்கு மீடியம் சைஸ் -4
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது -2
  3. சின்ன தக்காளி - நறுக்கியது -1
  4. பச்சை மிளகாய் நீள் வாக்கில் நறுக்கியது -4
  5. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் - சிறிது
  7. எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி
  8. கடுகு,உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  9. கடலை பருப்பு -1 மேஜைக்கரண்ட(சிறிது தண்ணீரில ஊற வைக்கவும்)
  10. கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது.
  11. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து அணைக்கவும்.
  2. ஆவியடங்கியவுடன் திறந்த சூடு ஆறிய பின்பு தோல் உரித்து சிறிய துண்டாகவோ அல்லது கையால் உடைத்தும் வைக்கலாம்.
  3. வாணலியில் எண்ணெய் சூடானவுடன்,கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து வெதுப்பி நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும்.வதக்கவும்
  4. அத்துடன் சிறிது உப்பு,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து பிரட்டி மூடி திறக்கவும்.
  5. வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.மசால் கொஞ்சம் இளக்கமாக இருந்தால் தொட்டுச் சாப்பிட சுவையாகபிருக்கும்.
  6. எனவே ஒரு அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்க்கவும். கொதிக்கட்டும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  7. அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்.
  8. பூரி சப்பாத்தி ஏன் தோசைக்கு கூட அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்