வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் சிக்கன் கீமா

Photo of Cabbage chicken keema by Asiya Omar at BetterButter
565
4
0.0(0)
0

முட்டைகோஸ் சிக்கன் கீமா

Dec-26-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் சிக்கன் கீமா செய்முறை பற்றி

கீமாவோடு முட்டைகோஸ் சேர்த்து சமைத்தால் ஆஹா அசத்தல்,பொதுவாக மட்டன் கீமா சேர்த்து செய்வோம்,சிக்கன் கீமாவும் செமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் கீமா - கால் கிலோ
  2. முட்டைக் கோஸ் - கால் கிலோ
  3. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் -2
  5. நறுக்கிய தக்காளி -2
  6. பச்சை மிளகாய் -2
  7. தயிர் -2 தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது -1+ 2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  10. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  11. வீட்டு பொது மசாலா - 2 தேக்கரண்டி
  12. மல்லி இலை - சிறிது
  13. உப்பு - தேவைக்கு.
  14. தேங்காய் அரைக்க:-
  15. தேங்காய்த்துருவல் -2 மேஜைக்கரண்டி
  16. முந்திரி பருப்பு -4

வழிமுறைகள்

  1. எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கொத்தி வாங்கிக் கொள்ளவும்.
  2. நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.அத்தோடு இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி,தயிர்,கறிமசாலா ஒரு தேக்கரண்டி,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
  3. முட்டைக் கோஸ்,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.
  4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி,இஞ்சி பூண்டு விழுது ,கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கி விடவும்.
  5. நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை சேர்க்கவும்.உப்பு சேர்த்து மூடி விடவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் ,வீட்டு மசாலா சேர்க்கவும்.
  6. சிக்கன் கீமா சேர்த்து நன்கு பிரட்டவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி 5 -7 நிமிடம் வேக வைக்கவும்.
  7. கீமா வெந்து வரும் பொழுது முட்டைகோஸ் சேர்க்கவும்.பிரட்டி 5 நிமிடம் இருக்கட்டும்.
  8. தேங்காய் அரைத்தது சேர்க்கவும்.இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.அடுப்பைக் குறைக்கவும்.சிறிது மல்லி இலை தூவி பிரட்டி அணைக்கவும்.
  9. சுவையான முட்டைக்கோஸ சிக்கன் கீமா தயார். சூடான சாதம் ரசத்துடன் பரிமாறலாம். சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்