வீடு / சமையல் குறிப்பு / நண்டு க்ரேவி

Photo of Crab gravy by Haja Seiyad at BetterButter
657
3
0.0(0)
0

நண்டு க்ரேவி

Dec-26-2017
Haja Seiyad
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு க்ரேவி செய்முறை பற்றி

சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நண்டு
  2. பெரிய வெங்காயம் - 2
  3. தக்காளி - 1
  4. பச்சைமிளகாய் -4
  5. மல்லி இழை
  6. கறிவேப்பிலை
  7. தேங்காய் - 1/2 கப்
  8. பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
  10. பட்டை, கிராம்பு ஏலக்காய்
  11. எண்ணெய்
  12. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  13. மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
  14. கரம் மசலா - 1/2 ஸ்பூன்
  15. மிளகு, சீரக தூள் - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நண்டை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் மல்லி கறிவேப்பிலை யை அறிந்து வைத்துக்கொள்ளவும்
  3. சட்டியில் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து கிளறவும் பின் வெங்காயாம் போட்டு கிளறவும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலைகலை போட்டு கிளறவும்
  4. பின் அதில் மசலா பொருட்களை சேர்த்து நன்றாக கிண்டியதும் நண்டை அதில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பூ சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்
  5. மிக்ஸியில் தேங்காய் பெருஞ்சீரகம் சேர்த்து தேங்காவும் பாலுமாக அறைத்துக்கொள்ளவும்
  6. நண்டில் தண்ணீர் வற்றியதும் அறைத்த விழுதை அதில் போட்டு நன்றாக எல்லா நண்டுகளிலும் படுமாறு கிண்டவும், 2 நிமிடம் கொதித்ததும் மல்லி இழைகளை மேலே தூவி இறக்கவும்.
  7. கம கம நண்டு க்ரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்