வீடு / சமையல் குறிப்பு / Lamb Head Curry With Cashew Paste

Photo of Lamb Head Curry With Cashew Paste by Hameed Nooh at BetterButter
661
3
0.0(1)
0

Lamb Head Curry With Cashew Paste

Dec-26-2017
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தலைக்கறி -1/2 கிலோ
  2. கத்திரிக்காய் - 4
  3. தயிர் - 1 கப்
  4. பன்டான் இலை - சிறியது
  5. பல்லாரி - 1
  6. இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்ரண்டி
  9. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  10. சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
  11. பட்டை - சிறிய துண்டு
  12. கிராம்பு - 2
  13. ஏலம் - 3
  14. கருவேப்பிலை - ஒரு கீற்று
  15. தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
  16. முந்திரி - 10
  17. தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  18. நெய் - 1 மேசைக்கரண்டி
  19. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கறியை சுத்தம் செய்து நன்றாக கழுவி சீரகத்தூள் சோம்புத்தூள் மஞ்சள் தூள் பாதி அளவு மிளகாய் தூள் மற்றும் அரை கப் தயிர் ஊற்றி பிரட்டி அரை மணி நேரங்கள் வைக்கவும்.
  2. முந்திரியை கால் கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் பன்டான் இலை போட்டு சற்று பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு கிளறவும்.
  4. வெங்காயம் சிறிது பொன்னிறமாக ஆனதும் இஞ்சி புண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து பச்சை வாடை போகும் வரை குறைந்த தனலில் கிளறவும்.
  5. பிறகு பிரட்டி வைத்த தலைக்கறியை மீதம் உள்ள மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறி 2 நிமிடங்கள் மூடி போட்டு குறைந்த தணலில் வேக விடவும்.
  6. பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் கறியின் தண்மையை பொறுத்து போடவும்.
  7. உப்பு சரிபார்த்து தேவை என்றால் சேர்த்துக் கொள்ளவும்.
  8. விசில் போனதும் கத்திரிக்காயை நீள வாக்கில் நறுக்கி தேங்காய் மற்றும் முந்திரி விழுதோடு சேர்த்து மேலும் 2 விசில் போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-27-2017
Pushpa Taroor   Dec-27-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்