வீடு / சமையல் குறிப்பு / இறால் பிரியாணி

Photo of Simple Prawn Briyani by Nafeesa Buhary at BetterButter
469
5
0.0(0)
0

இறால் பிரியாணி

Dec-26-2017
Nafeesa Buhary
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் பிரியாணி செய்முறை பற்றி

"இன்று என்ன சமையல் செய்வது?? என்று யோசனையா!? கவலையே வேண்டாம் இதோ சிம்புலான சுவையான இறால் பிரியாணி உங்களுக்காக :blush:

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அரிசி 2 கப்
  2. வரட்டிய இறால் 20
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1 பெரியது
  5. பட்டை சிறிய துண்டு
  6. கிராம்பு 1
  7. ஏலக்காய் 1
  8. ரம்பை இலை 2சிறிய துண்டுகள்
  9. மல்லி இலை 1/4 கப் நறுக்கியது
  10. புதினா 1/4 கப் நறுக்கியது
  11. பச்சை மிளகாய் 1 (கீரியது)
  12. தேங்காய் பால் 1/4 கப்
  13. தேங்காய் எண்ணெய் 4மேஜைக்கரண்டி
  14. நெய் 1மேஜைக்கரண்டி
  15. உப்பு தேவையான அளவு
  16. இஞ்சி பூண்டு விழுது 1மேஜைக்கரண்டி
  17. தயிர் 2தேக்கரண்டி
  18. மிளகாய் தூள் தேவையான அளவு
  19. மஞ்சள் தூள் தேவையான அளவு
  20. மல்லி தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் + நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,ரம்பை இலை சேர்த்து வதக்கவும்
  2. பின்னர் நீல வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. இதனுடன் தயிர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் வறட்டிய இறால் , மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து வதக்கவும்.
  6. இதனுடன் தேங்காய் பால் சேர்த்து 2நிமிடம் அதிகமான தீயில் வைத்து பின்னர் தீயை அணைக்கவும்.
  7. பிரியாணி அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பின்னர் அதனுடன் இறால் கலவையை சேர்த்து ரைஸ் குக்கரில் வைக்கவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்