வீடு / சமையல் குறிப்பு / வெந்தய கீரை கூட்டு

Photo of Methi kootu by neela karthik at BetterButter
479
3
0.0(0)
0

வெந்தய கீரை கூட்டு

Dec-27-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய கீரை கூட்டு செய்முறை பற்றி

கீரை மிகவும் ஆரோக்கியமானது தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு நல்லது அதனை வைத்து சுவையான சத்தான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயகீரை 1 கப்
  2. தேங்காய் 1/4 கப்
  3. சீரகம் 1 1/2 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 2
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. வர மிளகாய் 2
  8. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  9. தக்காளி 1 சிறியது
  10. வேக வைத்த பாசி பருப்பு 1/2 கப்
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  2. பாசி பருப்பை வறுத்து வேக வைத்து மசித்து கொள்ளவும்
  3. கீரையை சுத்தம் செய்து நறுக்கி அலசி வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  6. அதனுடன் சுத்தம் செய்த கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும்
  7. கீரை வதங்கியதும் மசித்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
  8. அவற்றுடன் அரைத்த தேங்காய் விழுது சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
  9. நன்கு கொதித்ததும் பெருங்காயதூள் சேர்த்து இறக்கவும்
  10. அவற்றில் கடுகு வர மிளகாய் தாளித்து கொட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்