Photo of Aviyal by Asiya Omar at BetterButter
461
4
0.0(0)
0

அவியல்

Dec-27-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

அவியல் கேரளா,தென் தமிழ்நாட்டில் பிரபல்யமான ரெசிப்பி.இரண்டுக்கும்.சிறிய வேறுபாடு.கேரளா அவியலில் ,தேங்காய்,தயிர்,தமிழக தென் மாவட்டங்களில் தேங்காய் மட்டும் ,தயிர் சேர்ப்பது இல்லை.ஆனால் சுவை அதீதம் தான்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சேனைக்கிழங்கு - 100 கிராம்
  2. வெள்ளைப்பூசணி -100 கிராம்
  3. கேரட் -1
  4. கொத்தவரை அல்லது பீன்ஸ் -6
  5. கத்திரிக்காய் சிறியது -4
  6. முருங்கைக்காய் -1
  7. வாழைக்காய் -1
  8. மாங்காய் -1
  9. மஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி
  10. அரைக்க:-
  11. தேங்காய் துருவல் அரை கப்
  12. சீரகம் -1 தேக்கரண்டி
  13. தாளிக்க:-
  14. தேங்காய் எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  15. கடுகு -1 டீஸ்பூன்
  16. மிளகாய் வற்றல் -3
  17. கருவேப்பிலை -2 இணுக்கு
  18. உப்பு - தேவைக்கு.
  19. விரும்பினால் கெட்டித் தயிர் - அரை கப்

வழிமுறைகள்

  1. காய்கறிகள் அனைத்தைதும் ஒரு போல் 2 -3 இன்ச் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. ஒரு மண் சட்டியில் அனைத்து காய்கறிகளும் சேர்த்து மஞ்சள் தூள் தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.7-10 நிமிடத்தில் வெந்து விடும். இறுதியில் உப்பு சேர்க்கவும்.
  3. தேங்காய் சீரகம் கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.
  4. காய் வெந்தவுடன் அரைத்ததைச் சேர்க்கவும்.
  5. 5 நிமிடம் கொதிக்கட்டும்.அடுப்பை அணைக்கவும்.
  6. தயிர் சேர்ப்பதாய் இருந்தால் அவியல் ஆறியதும் சேர்க்கவும்.விரும்பினால் தாளிக்கலாம்,இல்லையெனில் தேங்காய் எண்ணெயை அவியலில் கலந்து விடலாம்.
  7. ஒரு வாணலியில் தாளிக்க தேங்காய் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,கறிவேப்பிலை, வற்றல் வெடிக்க விட்டு அவியலில் கொட்டவும்.
  8. சுவையான சத்தான அவியல் தயார்.
  9. அடையுடன் பரிமாறலாம்.
  10. நெல்லை,கன்னியாகுமரி,கேரளா வாழையிலை பாரம்பரிய பரிமாறலில் அவியல் இல்லாமல் இருக்காது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்