வீடு / சமையல் குறிப்பு / முட்டை  மஞ்சூரியன்

Photo of Egg Manchurian by Surya Rajan at BetterButter
368
5
0.0(0)
0

முட்டை  மஞ்சூரியன்

Dec-27-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை  மஞ்சூரியன் செய்முறை பற்றி

முட்டை  மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை  : 3
  2. வெங்காயம் : 1
  3. மிளகாய் தூள் : 1 - 2 மேஜைக்கரண்டி
  4. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  5. உப்பு : தேவையான அளவு
  6. சோள மாவு : 1 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் : 2
  9. எண்ணெய் : தேவையான அளவு
  10. பச்சை மிளகாய் : 2
  11. சோயா சாஸ் : 1  மேஜைக்கரண்டி
  12. தக்காளி சாஸ் : 1  மேஜைக்கரண்டி
  13. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  14. மிளகு தூள் : ½  மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி  அதில் உப்பு , மிளகு தூள் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் இட்லி குக்கரில் வேக விட்டு எடுத்து கொள்ளவும்
  2. பின் அதனை சதுர துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  3. ஒரு கடாயில்  1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  4. பின் பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் , மஞ்சள் தூள், கரம் மசாலா  சேர்த்து வதக்கவும்
  5. பின் சோயா சாஸ் , தக்காளி சாஸ் , உப்பு சேர்த்து வதக்கவும் பின் 1 மேஜைக்கரண்டிசோள மாவினை தண்ணீரில் கரைத்து அதனை சேர்க்கவும் கலவை கெட்டியானதும் அதனுடன் முட்டை துண்டுகளை சேர்த்து கிளறவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்