வீடு / சமையல் குறிப்பு / பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி

Photo of Paneer Stuffed Bell Pepper Gravy by Hameed Nooh at BetterButter
473
5
0.0(0)
0

பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி

Dec-27-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி செய்முறை பற்றி

மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அடக்கம் செய்ய :
  2. குடை மிளகாய் - 2
  3. துருவிய பனீர் - 1 கப்
  4. மசித்த உருளை கிழங்கு - 1/2 கப்
  5. முட்டை - பாதி
  6. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  9. நறுக்கிய மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கேற்ப
  11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  12. க்ரேவி செய்ய :
  13. பல்லாரி - 1
  14. தக்காளி - 2
  15. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  16. பட்டை - சிறிய துண்டு
  17. கிராம்பு - 1
  18. ஏலம் - 2
  19. பிரியாணி இலை - 1
  20. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  21. மல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
  22. பால் - 1/2 கப்
  23. க்ரீம் - 1 மேசைக்கரண்டி
  24. முந்திரி - 4
  25. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  26. நெய் - 1 தேக்கரண்டி
  27. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குடை மிளகாயை சுத்தம் செய்து மேல் மற்றும் கீழ் உள்ள பாகங்களை வெட்டி எடுத்து விடவும்.
  2. பிறகு உள்ளே உள்ள விதைகளை நீக்கி கொஞ்சம் உயரத்தில் ரிங் போன்று வெட்டிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
  4. அதோடு பொடிதாய் நறுக்கிய பனீர் மசித்து வைத்த உருளைக்கிழங்கு மசாலா பொருட்கள் உப்பு மற்றும் நறுக்கிய மல்லித் தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. தவாவில் எண்ணெய் ஊற்றி குடை மிளகாய் ரிங்கை வைத்து தயார் படுத்தி வைத்துள்ள பனீர் கலவையை நன்கு இருக்கமாக வைத்து கரண்டியால் அழுத்தம் கொடுக்கவும்.
  6. இவ்வாறாக மூடி போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட்டு எடுத்து வைக்கவும்.
  7. க்ரைவி செய்முறை :
  8. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை போடவும்.
  9. பிறகு மெல்லிதாய் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
  10. ஆறியதும் இலையை எடுத்து விட்டு வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  11. அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு போடவும்.
  12. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அரைத்து வைத்த கலவை மசாலா பொருட்கள் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  13. இவ்வாறாக நான்கு நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த முந்திரி பால் மற்றும் க்ரீம் சேர்த்து குறைந்த தணலில் ஒரு நிமிடம் வேக விடவும்.
  14. தயார் செய்த பனீர் குடை மிளகாய்களை க்ரேவியில் மெதுவாக போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  15. அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித் தழை சேர்த்து சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்