வீடு / சமையல் குறிப்பு / Salem Mutton Gravy

Photo of Salem Mutton Gravy by Subashini Krish at BetterButter
1
5
5(3)
0

Salem Mutton Gravy

Dec-27-2017
Subashini Krish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • ప్రెజర్ కుక్
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மட்டன் 1/2 கிலோ
 2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
 3. கறிவேப்பிலை 1 கைப்பிடி
 4. துருவிய தேங்காய் 1 கப்
 5. வரமிளகாய் தூள் 2 ஸ்பூன்
 6. கொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்
 7. சீரகம் 2 ஸ்பூன்
 8. மிளகு 1 ஸ்பூன்
 9. சோம்பு 1 ஸ்பூன்
 10. பட்டை 2 துண்டு
 11. கிராம்பு 5
 12. கசகசா 1 ஸ்பூன்
 13. முந்திரி 4
 14. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
 15. உப்பு தேவையான அளவு
 16. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
 17. கடலை எண்ணெய் 50 மில்லி
 18. கடுகு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் தனியாக வதக்கி கொள்ளவும்
 2. இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, கசகசா, முந்திரி, சோம்பு, பட்டை, கிராம்பு தாளித்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
 3. இதனுடன் வரமிளகாய் தூள் 1 ஸ்பூன், கொத்தமல்லி தூள் 3 ஸ்பூன் சேர்த்து ஒரு முறை பிரட்டி ஆற வைக்கவும்
 4. ஆறிய பின் கிரைண்டரில(ஆட்டுகல்லுக்கு மாற்றாக) முதலில் தேங்காய் கலவையை அரைக்கவும். அதனுடனே வதங்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
 5. அரைத்த விழுதை வழித்து எடுத்து கொள்ளவும்
 6. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்
 7. பின்னர் உப்பு மஞ்சள் மீதமுள்ள மிளகாய் தூள், கொத்தமல்லி தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 8. மட்டன் நன்கு சுருண்ட பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின் 4 விசில் விடவும்
 9. குக்கர் ஆறிய பின, திறந்து மீண்டும் ஒரு கொதி விடவும்
 10. ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய 2 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி அடுப்பை அணைக்கவும்.
 11. சூடான இட்லி, தோசை, சாதம் என எல்லா உணவுகளுக்கும் ஏற்ற குழம்பாகும்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai annamalai
Jan-20-2018
Adaikkammai annamalai   Jan-20-2018

Wow.. mouth watering

Pradeep Vetrivel
Dec-28-2017
Pradeep Vetrivel   Dec-28-2017

Great Looks Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்