Photo of Simple Paneer Masala by Surya Rajan at BetterButter
271
5
0.0(1)
0

Simple Paneer Masala

Dec-27-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் : தேவையான அளவு
  2. எண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் : 1
  4. தக்காளி : 1
  5. பட்டை : சிறிதளவு
  6. கிராம்பு : 2
  7. ஏலக்காய் : 2
  8. கல்பாசி : சிறிதளவு
  9. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  10. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  11. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  12. சோள மாவு : 2 மேஜைக்கரண்டி
  13. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  14. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பனீர் யை சதுரமாக வெட்டி கொள்ளவும்
  2. தக்காளி யை 10 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் மையாக அரைத்து கொள்ளவும்  ( tomato puree )
  3. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் . கரம் மசாலா , உப்பு , 1 மேஜைக்கரண்டி சோள மாவு , சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் . பின் பனீர் யை சேர்த்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும்  
  4. ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு பனீர் யை பொரித்து எடுத்து தனியே வைக்கவும்
  5. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , ஏலக்காய், கல்பாசி சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பின் தேவையான உப்பு , கரம் மசாலா , மிளகாய் தூள் , இஞ்சி  பூண்டு விழுது , தக்காளி பியூரி சேர்த்து வதக்கவும்
  7. பின் தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  8. பின் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ajji Raaj
Dec-29-2017
Ajji Raaj   Dec-29-2017

கல்பாசி போடவே இல்ல

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்