Photo of Mutton Milk Curry by Ayesha Ziana at BetterButter
428
4
0.0(1)
0

Mutton Milk Curry

Dec-27-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Mutton Milk Curry செய்முறை பற்றி

பசும்பால், நெய் மற்றும் மசாலாக்களில் செய்த சுவையான மட்டன் கறி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் 1/4 கிலோ
  2. காய்ச்சிய பசும்பால் 3/4 கப்
  3. தண்ணீர் 250 முதல் 300 மில்லி
  4. நெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
  5. வெங்காயம் 1
  6. தக்காளி 1 அல்லது 1 1/2
  7. இஞ்சி சிறு துண்டு
  8. பூண்டு 4 பல்
  9. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. கரம் மசாலா 1 ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, மட்டன் துண்டுகள் சேர்த்து லேசாக வதக்கி, பாலையும் 150 மில்லி தண்ணீரையும் சேர்த்து, சிம்மில் மட்டனை வேக வைக்கவும். 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும். இடையிடையே பாத்திரத்தின் ஓரத்தில் படிந்துள்ள பாலை இளக்கி விட்டு கிளறவும்.
  2. மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  3. பாலும் தண்ணீரும் வற்றி மட்டன் வெந்ததும், அரைத்த விழுது, தக்காளி, உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. பின்பு மீதமுள்ள நெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து, இடையிடையே மீதமுள்ள தண்ணீரும் சேர்த்து வேக விடவும்.
  5. கறி சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. சூப்பரான மட்டன் பசும்பால் கறி தயார். பாலில் வேக வைப்பதால் மட்டன் சிறிது இனிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
  7. இடியாப்பம், பரோட்டா, சப்பாத்தி போன்றவையுடன் சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-28-2017
Pushpa Taroor   Dec-28-2017

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்