வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் கஜானா

Photo of Vegetable Khazana by Sowmya Sundar at BetterButter
213
4
0.0(0)
0

வெஜிடபிள் கஜானா

Dec-28-2017
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் கஜானா செய்முறை பற்றி

பலவிதமான காய்கறிகளை வேக வைத்து பச்சை நிற மசாலாவில்( கீரை ,கொத்தமல்லி, புதினா கலவை) கலந்து செய்யும் ஒரு ஆரோக்கியமான பஞ்சாபி ஹரியாளி போன்ற ஒரு டிஷ் இது.ஹரியாளியில் கொத்தமல்லி அரைப்பார்கள். நான் பாலக் மற்றும் புதினா இலைகளை அரைத்து செய்துள்ளேன்.கஜானா என்றால் பொக்கிஷம். காய்கறிகளின் பொக்கிஷம் இந்த டிஷ்.சப்பாத்தி ரைஸ் வெரைட்டிகளுடன் பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பஞ்சாபி
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் - 1/4 கப்
  2. காரட் - 1/4 கப்
  3. குடை மிளகாய்- 1/4 கப்
  4. காலிஃப்ளவர் - 1/4 கப்
  5. உருளைக்கிழங்கு - 1/4 கப்
  6. பச்சை பட்டாணி - ஒரு பிடி
  7. புதினா - 1/2 கப்
  8. பாலக் கீரை- 1/2 கப்
  9. கொத்தமல்லி இலை- 1/2 கப்
  10. பச்சை மிளகாய் - 3
  11. பூண்டு-3 பல்
  12. உப்பு
  13. மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  14. மல்லி தூள்- 1 டீஸ்பூன்
  15. சீரகம் - 1/4 டீஸ்பூன்
  16. கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
  17. பால் - 1/2 கப்
  18. வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  19. எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலக் கீரை, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ,பூண்டு சேர்த்து மிக்ஸியில் மிக சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  2. குக்கரில் நறுக்கிய பீன்ஸ் காரட் காலிஃப்ளவர் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சிறிது உப்பு சேர்த்து ஒரு விசில் வேக வைத்து கொள்ள வேண்டும்.
  3. கடாயில் வெண்ணெய் சீரகம் சேர்த்து குடைமிளகாயை வதக்கவும்.
  4. சிறிது வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்னர் மஞ்சள் தூள் ,மல்லி தூள்,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.அதில் பால் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும்.
  6. பின் வேக வைத்த காய்கறிகள் (தண்ணீருடன்) சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  7. எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்