வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குழம்பு

Photo of Chicken Curry by Asiya Omar at BetterButter
489
5
0.0(0)
0

சிக்கன் குழம்பு

Dec-28-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் குழம்பு செய்முறை பற்றி

இந்த சிக்கன் குழம்பு வெறும் சோறு, நெய்ச்சோறு,சப்பாத்தி,பரோட்டா,இட்லி,தோசை,ஆப்பம்,இடியாப்பம் என்று எல்லாவற்றுடனும் பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சிக்கன் துண்டுகள் - 1 கிலோ
  2. பெரிய வெங்காயம் -2
  3. பெரிய தக்காளி -2
  4. பச்சை மிளகாய் - 4
  5. கறி மசாலா -1 தேக்கரண்டி
  6. தயிர் 2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது 1+2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் -2 -3 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
  12. சோம்புத்தூள் -1 தேக்கரண்டி
  13. நறுக்கிய மல்லி,புதினா - சிறிது
  14. எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
  15. உப்பு - தேவைக்கு.
  16. அரைக்க:-
  17. தேங்காய்த்துருவல் -4 மேஜைக்கரண்டி
  18. முந்திரி பருப்பு -6

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. சிக்கனுடன்1 தேக்கரண்டி கறிமசாலா,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,தயிர்,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
  4. மேற்குறிப்பிட்ட மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரக,சோம்புத்தூள்அனைத்து மசாலாவும் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.உப்பு சேர்த்து மூடி மசிய விடவும்.
  5. சிறிது தண்ணீர் தெளிக்கவும்.கூட்டு போல் ஆனவுடன் ஊறிய சிக்கன் சேர்த்து பிரட்டவும்.
  6. மூடி வேக விடவும். தேவைப் பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.சிறிது மல்லி புதினா சேர்த்து பிரட்டவும்.
  7. மூடி வேக விடவும்.
  8. 10 நிமிடம் ஆனதும் திறந்து பார்க்கவும்.சிக்கன் வெந்து பிரட்டினாற் போல் இருக்கும்.
  9. தேங்காய் அரைத்தது விடவும்.தேவைக்கு சிக்கன் மூழ்கும் அளவு குழம்பு இருக்க வேண்டும்.தேங்காயுடன் முந்திரி பருப்பு சேர்த்தால் குழம்பு கெட்டியாக இருக்கும்.
  10. மீதியுள்ள பாதி மல்லி சேர்க்கவும்.
  11. சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  12. சுவையான சிக்கன் குழம்பு தயார். பக்க உணவாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்