Photo of Capsicum Paneer Curry by neela karthik at BetterButter
749
3
0.0(1)
0

Capsicum Paneer Curry

Dec-28-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் 100 கிராம்
  2. குடைமிளகாய் 1 நீளவாக்கில் அரிந்தது
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 1
  5. வெங்காயம் 1 நீளவாக்கில் அரிந்தது
  6. தக்காளி 1 நீளவாக்கில் மெலிதாக அரிந்தது
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  10. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்க்கவும்
  2. சீரகம் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதனுடன் மஞ்சள் மல்லிதூள் மிளகாய் தூள் சேர்க்கவும்
  4. பச்சை வாசம் இல்லாமல் பொன்னிறமாக வதங்கியதும் அரிந்த குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. 3 நிமிடம் மூடி வைத்து மிதமான தணலில் இருக்கவும்
  6. பின் அதனுடன் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. தக்காளி மசிந்து வதங்கியதும் பன்னீர் சேர்க்கவும்
  8. பன்னீர் உடையாமல் கிளறி விட்டு மூடி வைத்து 5 முதல் 7 நிமிடம் குறைந்த தணலில் வைக்கவும்
  9. கரம் மசால் தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான பன்னீர் ரெசிபி தயார்
  10. அதிக தக்காளி சேர்த்தால் விழுதாக அரைத்து பின்னர் சேர்க்கலாம்
  11. பன்னீரை எண்ணெயில் 2 நிமிடம் ஃப்ரை செய்தும் சேர்க்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-28-2017
Pushpa Taroor   Dec-28-2017

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்