வெண்டைக்காய் பச்சடி | Vendaikkai Pachchadi in Tamil

எழுதியவர் Surya Rajan  |  28th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vendaikkai Pachchadi by Surya Rajan at BetterButter
வெண்டைக்காய் பச்சடிSurya Rajan
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

6 votes
வெண்டைக்காய் பச்சடி recipe

வெண்டைக்காய் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Vendaikkai Pachchadi in Tamil )

 • வெண்டைக்காய் : ¼ கிலோ
 • வெங்காயம் : 1
 • தக்காளி : 1
 • புளி : சிறிதளவு
 • உப்பு : தேவையான அளவு
 • எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
 • குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :½  மேஜைக்கரண்டி + சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி )
 • அரைக்க
 • தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி
 • தாளிக்க
 • கடுகு : ½ மேஜைக்கரண்டி
 • சீரகம் : ½ மேஜைக்கரண்டி
 • கருவேப்பிலை : சிறிதளவு

வெண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி | How to make Vendaikkai Pachchadi in Tamil

 1. வெண்டைக்காயை நறுக்கி வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் 5 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும்
 2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
 4. தக்காளி வதங்கியதும் குழம்பு மசாலா , உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
 5. பின் புளி தண்ணீர் சேர்த்து  3 - 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க  விடவும்
 6. பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
 7. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்  

Reviews for Vendaikkai Pachchadi in tamil (0)