Photo of Drumstick Rasam by Ayesha Ziana at BetterButter
425
3
0.0(1)
0

Drumstick Rasam

Dec-28-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கைக்காய் 1
  2. துவரம்பருப்பு 1/3 கப்
  3. புளி எலுமிச்சை அளவு
  4. மல்லித்தழை அல்லது தண்டு சிறிது
  5. உப்பு தேவைக்கு
  6. தண்ணீர் தேவைக்கு
  7. அரைக்க: தக்காளி 1
  8. மிளகு 3/4 ஸ்பூன்
  9. சீரகம் 3/4 ஸ்பூன்
  10. தாளிக்க: கடுகு 1 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை 1 கொத்து
  12. சீரகம் 3/4 ஸ்பூன்
  13. வற்றல் மிளகாய் 1
  14. எண்ணெய் 1 முதல் 2 ஸ்பூன்
  15. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பை குக்கரில் 4 விசில் வேக வைத்து மசிக்கவும்.
  2. வாணலியில் முருங்கைக்காயுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்னர் வெந்த முருங்கையின் சதை பகுதியை மட்டும் எடுத்து, அதை லேசாக மசித்து வைக்கவும்.
  3. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளதை சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. ஒரு வாணலியில் புளிக்கரைசல், மசித்த பருப்பு, அரைத்த விழுது, 1 கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.
  5. பின்னர், மசித்த முருங்கை சதை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  6. மற்றொரு கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளிக்கவும். இதை கொதிக்க வைத்த ரசத்தில் ஊற்றவும்.
  7. அடுப்பை அணைத்து விட்டு, மல்லித்தழை அல்லது தண்டு சேர்த்து, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  8. சுவையான முருங்கைக்காய் ரசம் தயார். இதை சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-29-2017
Pushpa Taroor   Dec-29-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்