வீடு / சமையல் குறிப்பு / காஷ்மிரி தம் ஆலு

Photo of Kashmiri Dum Aloo by neela karthik at BetterButter
301
3
0.0(0)
0

காஷ்மிரி தம் ஆலு

Dec-28-2017
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காஷ்மிரி தம் ஆலு செய்முறை பற்றி

பேபி பொட்டேட்டோ வைத்து வித்தியாசமான வட இந்திய ஸ்டைல் சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஜம்மு காஷ்மீர்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபி பொட்டேட்டோ 5 ,அல்லது6
  2. தயிர் 1 கப்
  3. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  4. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  7. கரம் மசால் யூள் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  11. எண்ணெய் தாளிக்க
  12. கஸ்தூரி மேத்தி சிறிது
  13. முந்திரி 10
  14. இஞ்சி 1 சிறிய துண்டு
  15. பூண்டு 5 பல்
  16. சீரகம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறிய உருளைகிழங்கை வேக வைத்து தோலுரித்து வைக்கவும்
  2. தக்காளியை விழுதாக அரைத்து வைக்கவும்
  3. அதில் சிறு சிறு துளைகள் இடவும்
  4. மிளகாய்,மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் ஊற விடவும்
  5. அவற்றை மிதமான தணலில் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் இஞ்சி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  7. அதனுடன் வெங்காயம் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  8. அவற்றை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  10. அரைத்த விழுதை சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வதக்கவும்
  11. பின் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
  12. கரம் மசால் தவிர அனைத்து மசால் தூள் உப்பு சிறிது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  13. கொதிக்கும் பொழுது தயிர் சேர்க்கவும்
  14. தயிர் பச்சை வாசம் இல்லாமல் 5 நிமிடம் வதக்கவும்
  15. கிரேவி கெட்டியானதும் உருளைகிழங்கு சேர்க்க வேண்டும்
  16. கிழங்கு உடையாமல் கிளறி விட்டு கரம் மசால் கஸ்தூரி மேத்தி தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்