வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் புளி வெல்லம் கூட்டு

Photo of Brinjal Tamarind Jaggery Kootu by Krishnasamy Vidya Valli at BetterButter
789
3
0.0(0)
0

கத்தரிக்காய் புளி வெல்லம் கூட்டு

Dec-28-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் புளி வெல்லம் கூட்டு செய்முறை பற்றி

இது சிறிது வித்யாசமான கூட்டு . அதிகமாக யாரும் செய்வதில்லை . ஆனால் புளிப்பு உப்பு காரம் இனிப்பு சேர்ந்த அருமையான சுவையுடன் இருக்கும். தனியாகசூடு சாதத்துடன் பிசைந்து அல்லது தயிர் சாதத்திற்கு கூட தொட்டுக்கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தரிக்காய் - 2
  2. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  4. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  5. புளி - ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  6. வெல்லம் - 2 சிறிய துண்டு
  7. வறுத்து அரைக்க தேவையானவை :
  8. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. மிளகு - 8
  10. மிளகாய் வத்தல் - 1
  11. பெருங்காயம் - 2 சிட்டிகை
  12. எண்ணெய் - 2 டிராப்ஸ்
  13. தாளிக்க : கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  14. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  15. தேங்காய் துருவல் - 2
  16. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  17. மிளகாய் வத்தல் - 1
  18. எண்ணெய்-1/2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் கத்தரிக்காயை எண்ணெய்விட்டு இரண்டு பிரட்டு பிரட்டி எடுக்கவும்
  2. உப்பு மஞ்சள்பொடி மற்றும் புளியை கரைத்து சேர்க்கவும்
  3. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் திரித்து சேர்க்கவும்
  4. வெல்லம் சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி விடலாம்
  5. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  6. தாளித்ததை சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்