வீடு / சமையல் குறிப்பு / மட்டர் பனீர்

Photo of Mutter Paneer by Asiya Omar at BetterButter
495
3
0.0(0)
0

மட்டர் பனீர்

Dec-28-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டர் பனீர் செய்முறை பற்றி

பனீரும் பச்சைப் பட்டாணியும் சேர்த்து செய்யும் கிரேவி, செமையாக இருக்கும்.பட்டர் நாண் உடன் சாப்பிட சூப்பர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் துண்டுகள் -100 கிராம்
  2. பச்சைப் பட்டாணி -50 கிராம்
  3. வெங்காயம் -1
  4. தக்காளி -1
  5. முந்திரி பருப்பு 6
  6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  8. மஞ்சள தூள்,கரம் மசாலா - தலா 1/4 தேக்கரண்டி
  9. கசூரி மேத்தி -2 தேக்கரண்டி
  10. வெண்ணெய் -2 தேக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. பனீரை குளிர் நீரில் போட்டு வைக்கவும்.பச்சை பட்டாணியை வேக வைத்து தனியாக வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,முந்திரி பருப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  3. ஆறவிட்டு அரைத்து வைக்கவும்.
  4. ஒரு கடாயில் வெண்ணெய் சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
  5. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.கலந்து கொதிக்க விடவும்.
  6. பச்சைப் பட்டாணி சேர்க்கவும்,கலந்து விடவும்,பனீர் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.
  7. சேர்ந்து கொதிக்கட்டும். கசூரி மேத்தி சேர்க்கவும்.கலந்து விட்டு அடுப்பைக் குறைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  8. இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு பவுலில் எடுத்துப் பட்டர் நாணுடன் பரிமாறவும்.
  9. சுவையான மட்டர் பனீர் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்